சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகம்.அந்த வகையில் மிக பெரிய எதிர்பார்ப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான இவரின் தர்பார் திரைப்படம் தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா என பல நட்சத்திரங்கள் நடித்து வந்தனர். கொரோனா காரணமாக தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மீண்டும் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி நடிகராக ஆவதற்கு முன்பு பஸ் கண்டக்டராக பணிபுரிந்தார் என்பது அனைவரும் அறிந்ததே, மேலும் தற்போது அவர் தனது கண்டக்டர் நண்பர்களுடன் நடிகரான பின்பு எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்…