முன்பெல்லாம் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்தார்கள். இப்போதெல்லாம் வீட்டுக்கு, வீடு டிவி பெட்டி இருப்பதால் சின்னத்திரை நடிகர்களும் அதற்கு இணையாக ரீச் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் சின்னத்திரை நடிகை யுவஸ்ரீக்கும் அறிமுகமே தேவையில்லை. சின்னத்திரை வெள்ளித்திரையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர்தான் யுவ ஸ்ரீ.

இப்போது அம்மணி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்மகள் வந்தாள் சீரியலில் பிஸியாக இருக்கிறார். இவர் நடித்த சின்னத்தம்பித் திரைப்படம் இவருக்கு மிகவும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. நரகாசுரன் என்னும் தொடர் மூலம் சீரியலுக்குள் வந்தார். தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ரகுவம்சம் உள்பட பல தொடர்களிலும் நடித்தார்.

இப்போது முதன்முறையாக யுவ ஸ்ரீ தன் மனதைத் திறந்துப் பேசியிருக்கிறார். அதில், ‘என் குடும்ப சூழல் காரணமாகத்தான் சீரியலில் நடிக்க வந்தேன். ஒருகட்டத்தில் நானும் திருமணம் செய்ய நினைத்தேன். சரியான வரன் அப்போது அமையவில்லை. ஒருகட்டத்தில் வயது கூடிக்கொண்டே சென்றதால் நம் வாழ்வில் திருமணம் கிடையாது என முடிவெடுத்தேன். என் உலகமே அம்மா தான். இப்போதும் நிறைய நடிக்க ஆசை. வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.’என உருக்கமாகச் சொல்லியுள்ளார்.