பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் துவங்கப்பட்டு 70 நாட்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. இன்னிலையில் கடைசி வாரத்தில் யார் யார் இழக்கப் போகின்றனர் என்ற கணிப்பில் ரசிகர்கள் ஈடுபடத் துவங்கி உள்ளனர்.இதில் மூன்றாம் இடத்தை பிடிக்கும் நபருக்கு 5 லட்சம் கொடுக்கப்படும்.

எனவே 5 லட்சத்துடன் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகின்றனர் என பலர் பல்வேறு விதமாக யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கின்றனர், என்பதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது.

டபுள் எலிமிநேஷன் பற்றி உலகநாயகன் கமல் அறிவிப்பது இன்றைய முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது. இன்று அக்ஷரா மற்றும் வருண் எலிமினேட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த இரண்டு போட்டியாளரின் ரசிகர்களுக்கும் கொஞ்சம் வருத்தத்தை தந்துளளது என்று தான் சொல்ல வேண்டும்.