தங்களுடைய திருமணத்தை முன்னிட்டு 18,000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ‘விக்கி – நயன்’ ஜோடி செய்த செயல், குவியும் வாழ்த்துக்கள்..

விக்னேஷ் சிவன் – நயன்தாரா இவர்கள் இருவருக்கும் இன்று ( ஜுன் 9ம் தேதி ) மகாபலிபுரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில். இன்று காலை 10.30 மணி அளவில் இவர்கள் இருவருக்கும் சிறப்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவல் அனைத்தும் செய்தியில் வந்த நிலையில், தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள்

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திருமணம் நடந்துமுடிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தான் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம். பல திரை பிரபலங்கள் இந்த அழகிய ஜோடிக்கு வாழ்த்துக்கள் கூறிய வண்ணம் உள்ளார்கள்.

இந்த நிலையில் இவர்களது திருமணத்தை முன்னிட்டு, 18,000 ஆதரவற்ற குலைந்தலுக்கு இலவசமாக உணவு வழங்க விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நற்செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.