‘பாவம் கணேசன்’ சீரியல் நடிகர் நவீனின் மனைவிக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி.. வெளியான வீடியோ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவி-யில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இவற்றில் சில சீரியல்கள் கடந்த ஆண்டு போடப்பட்டிருந்த கொரோனா லாக்டவுனிற்கு பிறகு ஒளிபரப்பாக துவங்கியவை. அந்த வகையில் பாவம் கணேசன் சீரியல் கடந்த சில மாதங்களாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது.

தன் சந்தோஷத்தை மறந்து குடும்பத்திற்கென்றே வாழும், உழைக்கும் இளைஞன் பற்றிய கத்தி தான் “பாவம் கணேசன்”. விஜய் டிவி-யின் கலக்கப் போவது யாரு புகழ் நவீன்,இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஒளிபரப்பாக துவங்கியதில் இருந்து ஏராளமான முறை நேர மாற்றங்களை சந்தித்து விட்டது.

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகர் நவீன். இவருக்கு சமீபத்தில் கிருஷ்ணா குமாரி என்பவரோடு திருமணம் நடந்து முடிந்தது , தற்போது இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியானது கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது அந்த காணொளி காட்சி இதோ உங்களின் பார்வைக்காக , கண்டு மகிழுங்கள் .,