நடிகர் விக்னேஷ் காந்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது அதில் கலந்து கொண்டவர்கள் யார் யார் தெரியுமா..? அந்த அழகிய புகைப்படம் இதோ…

சமீபகாலத்தில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விக்னேஷ் காந்த். இவர் ஆர்.ஜெ வாகவும் இருந்துள்ளார். பிரபல யூ டியுப் சேனலான ப்ளாக் ஷிப் நிறுவனர் மற்றும் வழிநடத்துனர். இவர் நடத்தி வரும் யூ டியுப் மூலம் பல கலைஞர்களை உருவாக்கி உள்ளார்.

அதில் வெப் சீரிஸ், காமெடி ஷோ என பல தொடர்களை நடத்தி வருகிறார். அதை தொடர்ந்து படங்களிலும் நடித்து வந்த அவர் தற்போது சிறந்த காமெடி நடிகராகி உள்ளார். ஹிப் ஹாப் ஆதி நடித்த மீசைய முறுக்கு என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

நட்பே துணை, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, கார்த்திக்கின் தேவ் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்தனர். சமீபத்தில் அவருக்கு ஒரு கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

 

அதில் சிவகார்த்திகேயன் மற்றும் ஞானசம்பந்தம் அவர்களும் கலந்து கொன்டு மணமக்களை வழித்தினர். திருமணம் முடிந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் கோலாகலமாக நடந்தது. அதில் பல பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

 

கே.எஸ். ரவிக்குமார் , மனோபாலா கார்த்திக், விஜய் டிவி பிரபலமான அமுதவாணன், தங்க துரை போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சையை கொண்டாடிய புகைப்படம் தற்போது வைரலாகி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியது. அந்த அழகிய புகைப்படம் உள்ளே…