ஷூட்டிங் ஸ்பாட்டில் நாளா பக்கமும் பந்தை பறக்க விடும் நடிகர் யோகி பாபு , இணையத்தில் வெளியான வீடியோவை பாருங்க ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தன்னை முன்நிறுத்திக் கொண்ட யோகி பாபு தற்போது தமிழ் திரையுலகில் தற்போது உள்ள முன்னணி காமெடி நடிகர்களில் மிகவும் பிரபலமாக விளங்கி வருபவர் நடிகர் யோகி பாபு. ஆம் நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் சோலோ ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து நம்மை மகிழ வைத்து வருகிறார் நடிகர் யோகி பாபு. கோலாமாவு கோகிலா படத்தில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீது காதல் வயப்பட்டத்தை அனைவரும் பார்த்து ரசித்தனர். இவரது கால்ஷீட் கிடைக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு இவர் புகழ் உயர்ந்து உள்ளது.

இவர் தற்போது எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் , ஆதலால் ரசிகர்களும் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றனர் , சமீபத்தில் இவரது புதிய திரைப்பட ஷூடிங்கில் கிரிக்கெட் விளையாடி உள்ளனர் , அப்பொழுது நாலா பக்கமும் பந்தை பறக்கவிட்ட யோகிபாபுவின் காணொளியானது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றது ..