பறக்க பறக்க துடிக்குதே என்ற பாடலுக்கு நடனமாடி தெறிக்க விட்ட ஜோடி…அவர்கள் எந்த நாட்டினர் தெரியுமா..? ரசிக்க வைக்கும் வீடியோ உள்ளே..

சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் மேகம் கருக்காத பாடலுக்கு நடனமாடிய ஜப்பானிய ஜோடியின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இந்த திரைப்படத்தில் மிகவும் பிரபலமான நடிகர் தனுஷ் நடித்திருந்தார். அதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் , ராஷிக்கண்ணா மற்றும் பிரியா பவானி மூவரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்.

 

இதில் வரும் மேகம் கருக்காத என்ற பாடல் தற்போது ட்ரண்ட் ஆகி வருகிறது. இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த பாடல் நடுவில் வரும் பறக்க பறக்க என்ற வரிகளுக்கான நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் அனைவரும் நடனமாடி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் வெளிநாட்டினருக்கு கூட மிகவும் பிடித்த பாடலாக மாறியது.

தற்போது ஜப்பானில் ஒரு ஜோடி பறக்க பறக்க பாடலுக்கு நடனமாடி அசத்தி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ உள்ளே…