என்னது விஜய் டிவியில் முடிவுக்கு வரும் சீரியல் தொடர் இதுவா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சீரியல் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி பார்ப்பர். அப்படி சீரியல் தொடரை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சிகளில் முன்னணியில் உள்ள தொலைக்காட்சிதான் விஜய் டிவி. தினமும் காலை முதல் இரவு வரை பல தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதிலும் சில தொடர்களுக்கு ரசிகர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.

தொடர்ந்து பல புதிய தொடர்கள் வந்த வண்ணம் உள்ளதால் ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களை முடிவுக்கு கொண்டு நிலையில் உள்ளது. அந்த வகையில் பாவம் கணேசன் என்ற தொடரில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் நவீன் சின்னத்திரையில் கலக்க போவது யாரு என்ற ஷோ மூலம் அறிமுகமானார்.

இவர் பல குரலில் பேசி தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதை தொடர்ந்து அவருக்கு இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில் தற்போது சிறப்பாக நடித்து மக்களை கவர்ந்தார். இவருக்கு ஜோடியாக நேகா கவுடா நடித்துள்ளார். குடும்ப கதையை அடிப்படையாக கொண்ட இந்த தொடர் 300 எபிசோட்களுக்கு மேல் ஓடிவருகிறது.

இந்நிலையில் தற்போது ஒளிபரப்பப்பட்டு வரும் பாவம் கணேசன் என்ற தொடர் முடிவுக்கு வருவதாக தகவல் வந்துள்ளது.இதை அறிந்த ரசிகர்கள் இந்த சீரியலை மிஸ் பண்ணுவதாக ஷேர் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)