நடிகை மீனாவின் 46 வது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகையின் அக்கா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. புகைப்படம் உள்ளே…

திரையுலகில் குழந்தை நச்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். முத்து என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

இதைத்தவிர பாளையத்து அம்மன் திரைப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழை பெற்றார். வெற்றி கொடிக்கட்டு, வானத்தை போல, பொற்காலம் போன்ற பல வெற்றி படங்களை தந்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார்.  இவர் இன்ஜினீயரானா வித்யாசாகரை 2009 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

 

இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் வித்யாசாகரின் நுரையீரல் செயலிழந்ததால் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இந்த செய்தியை கேட்ட திரையுலகம் சோகத்தில் மூழ்கியது. மீனாவின் குடும்பமும் சோகத்தில் இருந்த வந்த நிலையில் அவர்களுக்கு நண்பர்கள் தான் ஆறுதல் கூறிவந்தனர். தற்போது மீனா அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வருகிறார்.

 

இன்று அவரின் 46 வது பிறந்தநாளை நண்பர்களோடு சேர்ந்து சந்தோஷமாக கொண்டாடினார்.இவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை சினேகாவின் அக்கா சங்கீதா உடன் பிறந்தநாள் கொண்டாடிய மீனாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.. அந்த அழகிய புகைப்படம் இதோ….