கணவர் இல்லாமல் நண்பர்களோடு முதன் முறையாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகை மீனா !! இணையத்தில் வெளியான காணொளி இதோ ..

நடிகை மீனா  தனது கணவர் இறப்புக்கு பின்னர் வரும் முதல் பிறந்தநாள் ஆக கொண்டாடியுள்ளார். தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராஜ்கிரன் நடிப்பில் வெளியான ‘ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மீனா.  அதன் பின்னர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என  அப்போதைய டாப் 10 நடிகர்களுடன் வலம் வந்தார்.

அடக்கம் ஒடுக்கமான குடும்ப பெண்ணாக இருந்தாலும் சரி, அல்ட்ரா மாடல் லுக்காக  இருந்தாலும் சரி எந்த கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தினார் நடிகை மீனா. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90ஸ் கிட்ஸ் கனவுக்கன்னி ஆக வலம் வந்த இவர், 2009 இல் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். குழந்தை பிறந்த பிறகு கொஞ்சம் குண்டாகி விட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் இணைந்து நடித்தார். இவரை போலவே இவரது மகளும் விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவரது கணவர் நுரையீரல் பிரச்சனை காரணமாக சமீபத்தில் இ றந்தார். இந்த சோகத்தில் இருந்து அவரை மீட்டுக் கொண்டு வர அவரது தோழிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

தனது கணவர் இன்றி 46வது பிறந்தநாள் இன்று கொண்டாடும் மீனாவை சோகத்திலிருந்து மீட்டெடுப்பதற்காக வேண்டி சினேகாவின் சகோதரி சங்கீதா மீனாவிற்கு கேக் வெட்டி மீனாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த மீனாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நாமும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். ஹாப்பி பர்த்டே மீனா……