பிறந்தநாள் கேக்கை பார்த்து இப்படி பண்ணிட்டீங்களே என்று கதறி அழுத ஸ்ருத்திகா.. அப்படி என்ன இருந்தது தெரியுமா..? வீடியோ உள்ளே..

குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வரை மிகவும் பிடித்தமான ஒரு ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த ஷோவ்வை பிரபலமான தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. இது சமையளுடன் காமெடியும் கலந்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி.

அந்த வகையில் மூன்று சீசன் நடந்த நிலையில் மூனறாவது சீசனில் டைட்டில் வின்னரானார் ஸ்ருத்திகா. இவர் ஸ்ரீ திரைப்படத்தில் சூர்யாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். சில படங்களை மட்டுமே நடித்த இவர் சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் அர்ஜுன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு பிஸ்னஸ் பெண்ணாக மாறினார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அழைத்ததால் கலந்து கொண்டார். பின்னர் இவர் தன் பேச்சாலும், துரு துறுவென இருக்கும் குணத்தாலும் மக்களை தன் பக்கம் இழுத்தார். தற்போது அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மொத்த குக் வித் கோமாளி டீமும் கலந்து கொண்டு ஜாலியாக கொண்டாடினர்.

அதில் நடிகர் சிவகார்த்திகேயன் ,புகழ், சிவாங்கி,சந்தோஷ்,அம்மு அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் பிறந்தநாள் கேக்கில் டம்மி பல்லி இருப்பதை பார்த்து கதறினார். பின்னர் அதனை எடுத்துவிட்டு கேக்கை வெட்டி வேற லெவெலில் கொண்டாடினார். இதோ அந்த வீடியோ …