ரன்வீர்சிங் மேடையில் எமோஷனல் ஆகி மனைவியிடம் செய்த செயலால் அதிர்ந்த அரங்கம்.. வாயடைத்து போன ரசிகர்கள்.. வைரல் வீடியோ..

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் ரன்வீர்சிங். இவர் இந்தி திரையுலகில் பேண்ட் பாஜா பாரத் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதை தொடர்ந்து பாம்பே டாக்கீஸ், லூதெரா, ராம் லீலா போன்ற படங்களில் நடித்தார்.இவரின் நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான பல விருதுகளை வாங்கியுள்ளார்.

அதில் ஃபில்ம்ஃபேர் அவார்ட் மட்டும் ஐந்து முறை பெற்றுள்ளார். இவரும் இந்திய நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர். இவர் இந்தி நடிகையான தீபிகா படுகோனேவை கடந்த 2018 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தீபிகா படுகோனேவும் பாலிவுட்டில் பல வெற்றி படங்களை தந்துள்ளார். இந்த இருவரும் பாலிவுட்டில் டாப் நடிகர்கள்.

இருவரும் பஜிரோ மஸ்தானி , பத்மாவத் உள்ளிட்ட சில படங்களை இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான ஸ்போட்ர்ஸ் திரைப்படமான 83 என்ற படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 67வது ஃபில்ம்ஃபேர் அவார்ட் விழாவில் 83 படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்குக்கு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் எமோஷனலாகி பேசிய ரன்வீர் மனைவியை கட்டி முத்தமிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் அதனை ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த காணொளி

 

View this post on Instagram

 

A post shared by Filmfare (@filmfare)