சந்தோஷத்தில் சத்தமாக கத்திய சிம்பு… மல்லி பூ பாடல் ஸ்டுட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொண்டாட்டம்.. வைரல் வீடியோ உள்ளே..

நடிகர் சிம்பு நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இதில் சிம்பு முத்து என்ற வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக சித்தி இட்டாணி நடித்திருக்கிறார். இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கினார்.

தற்போது இந்த படம் வெற்றி நடை போட்டு அதிக வசூலை பெற்று வருகிறது. இந்த படத்தில் வரும் பாடலான மல்லி பூ வச்சி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

பாடகி மதுஸ்ரீ பாடிய நிலையில் நடனத்தை பிருந்தா மாஸ்டர் இயக்கினார். இந்நிலையில் இந்த பாடலின் மேக்கிங் வீடியோ முடிந்த சந்தோஷத்தில் சிம்பு மற்றும் குழுவினர் சத்தமாக கத்தி கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..