என்னய்யா இப்படிலாம் பேசுறீங்க.. நான் என்ன துரோகம் பண்ண உங்களுக்கு.. கதறி அழும் கூல் சுரேஷ்…கலங்க வைக்கும் வீடியோ உள்ளே..

கூல் சுரேஷ் தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர். அந்த வகையில் நடிகர் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியவர் கூல் சுரேஷ் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இவர் சொன்ன ” வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு” என்ற பஞ்ச் பல இடங்களில் சொல்லி சொல்லி ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

எங்கே சென்றாலும் இந்த பஞ்ச் சொல்லாமல் இருக்கவே மாட்டார். இந்த படத்தை அதிகமாக ப்ரொமோட் செய்தவர் இவர் என்றே சொல்லலாம். தற்போது இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் படத்தை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சென்ற கூல் சுரேஷ்க்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு. இதை பார்த்த கூல் சுரேஷ் நடிகர் சிம்பு சொன்னதற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.

அதில் அவர் நான் என் தலைவனுக்காகத்தான் எல்லாம் பண்ணேன். ஆனால் என் காரை சிம்பு ரசிகர் உடைத்ததாக சொல்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படி பண்ணவேண்டும் என்னை பார்க்க, கைகொடுக்க ரசிகர்கள் காரின் மேல் ஏறினார்கள் அவ்ளோதான். ஒருத்தன் மேல வரவே கூடாதா ஏன் எப்படி அவதூறா பேசறீங்க. நான் எவ்ளோ கஷ்டத்தில் இருக்கேனு தெரியுமா என்று கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ பார்க்கும் அனைவரையும் கலங்க செய்யும் வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by News7 Tamil (@news7tamil)