நடிகையுடன் நடுராத்திரியில் பைக்கில் சுற்றும் கவின்…ப்ரேக்கப்புக்கு பின் இப்படி மாறிட்டாரே..அந்த நடிகை யார் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பான காண காணும் காலங்கள் சீரியலில் நடித்ததன் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவெற்பை பெற்றார்.  பின்னர் இவர் பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்டு  சிறப்பாகவிளையாடினார். சக போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்தார்.

ஆனால் ஷோ முடிந்து வெளியே வந்ததும் தங்கள் இருவருக்கும் இடையில் ஏதும் இல்லை என சொல்லிவிட்டனர். கவின் தற்போது வெள்ளித்திரையில் பிஸியாகி விட்டார். நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதை தொடர்ந்து லிப்ட் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டார். தற்போது இவர் டாடா திரைப்படத்தில் நடித்துவருகிறார்.அதில் அவருக்கு ஜோடியாக நடிகை அபர்னாதாஸ் நடித்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் ஜோடியாக பைக்கில் சென்ற புகைப்படம் வைரலாகியது. இதை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவுடன் பிரேக் அப்பை தொடர்ந்து இவருடன் ஜோடி சேர்ந்து விட்டாரா என்ற யோசித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் நடித்த டாடா படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் அப்போது இந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.