Connect with us

கூடவே இருந்து குழி பறித்த நபர்….! நம்பி கொடுத்ததற்கு போண்டாமணிக்கு துரோகம் செய்த ஆசாமி…. எச்சரிக்கை…!!!

CINEMA

கூடவே இருந்து குழி பறித்த நபர்….! நம்பி கொடுத்ததற்கு போண்டாமணிக்கு துரோகம் செய்த ஆசாமி…. எச்சரிக்கை…!!!

நடிகர் போண்டா மணியிடம் இருந்து உதவி செய்வதாக கூறி ஒரு நபர் ஒரு லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் போண்டாமணி. சினிமா துறையில் சாதிக்க நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது நகைச்சுவை மூலமாக தனி இடத்தை பிடித்தவர். வடிவேலுவின் நகைச்சுவை பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் இணைந்து நடித்தார்.

சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை, உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருந்தார் குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. நடிகர் போண்டாமணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரகப் பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு பார்த்திபன், வடிவேலு, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு போண்டாமணி கடந்த 27ஆம் தேதி வீடு திரும்பினார். இதனிடையே மருத்துவமனையில் உதவி செய்வது போல் நடித்து ராஜேஷ் என்ற ப்ரீத்திப் என்பவர் போண்டாமணியுடன் பழக்கம் ஆகியுள்ளார். அவருக்கு உதவியாக கடைகளுக்கு செல்வது போன்ற உதவிகளை செய்து வந்தார். இதை நம்பி அவருடைய மனைவி மருந்து வாங்கி வருவதற்கு ஏடிஎம் கார்டை கொடுத்து உள்ளார். மருந்து வாங்கி தருவதாக கூறிச் சென்ற அவர் அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஒரு லட்சத்திற்கு நகை வாங்கியதாக செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்தது.

இதை தொடர்ந்து ஏமாற்றம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போண்டாமணியின் மனைவி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி கண்டுபிடித்தனர் . மேலும் அவரிடம் பணம் எதுவும் மீட்டதாக தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரிடம் இருந்து பணத்தை யார் என்று தெரியாத நபர் திருடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
To Top
error: Content is protected !!