விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்த நிலையில், பாரதி மற்றும் கண்ணம்மா இடையே பல சண்டைகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் இரட்டை குழந்தைகளுடன் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பானது. தினம்தோறும் புதுவித எதிர்பார்ப்புகளுடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மா எப்போது ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அவ்வகையில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் டி என் ஏ பரிசோதனை ரிசல்ட் தற்போது பாரதியிடம் கிடைத்துள்ளது. அதாவது பாரதிக்கும் அவருடைய மகள்கள் ஹேமா மற்றும் லட்சுமி என மூவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை ஒரே மாதிரியாக வந்துள்ளது. இதனால் தனது தவறுகளை உணர்ந்து பாரதி கதறி அழுகிறார். எனவே பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் எட்டிவிட்டதாக ரசிகர்கள் கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.