தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தின் படபிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே தற்போது வரை படத்தின் புதிய அப்டேட் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் தங்களின் டப்பிங் பணியை முடித்துள்ளது குறித்து பதிவிட்டுள்ளனர். அதே சமயம் படத்தின் படப்பிடிப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு முடிவடைந்ததாக செய்தி வெளியானது.

படப்பிடிப்பு முடிந்த கையோடு தாடி மீசை சேவ் செய்து ஹாலிவுட் ஹீரோ போல அஜித் மாறிவிட்டார். இந்நிலையில் வெளியூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று காலை நடிகர் அஜித் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் எடுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.