94 வயதில் தனி வீட்டில் வசிக்கும் கோவை சரளாவின் தாய்… முதல் முறையாக வெளியீடு.. வைரல் வீடியோ - cinefeeds
Connect with us

LATEST NEWS

94 வயதில் தனி வீட்டில் வசிக்கும் கோவை சரளாவின் தாய்… முதல் முறையாக வெளியீடு.. வைரல் வீடியோ

Published

on

தமிழ் சினிமாவில் நடிகை கோவை சரளா நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தவர். நகைச்சுவை நடிகை மனோராமவுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர். பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக நடிகையா திகழ்ந்து வருகிறார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த இவர் 9 வகுப்பு வரை தான் படித்திருக்கிறார். சிறுவயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவர் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

Advertisement

தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்து விட்டவர். இப்படி சினிமாவில் கோவை சரளா கொடி கட்டி பறந்தாலும் கோவை சரளா குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், இவருக்கு நான்கு அக்கா, ஒரு அண்ணன். கோவை சரளா தான் கடை குட்டி. திருமணம் செய்துகொள்ளாத ஒரு நடிகை. ஆனால், சகோதரி, சகோதரன் பிள்ளைகளையே அவர் படிக்க வைத்து வருகிறார். பின் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.

Advertisement

இந்த நிலையில், ல் நடிகை கோவை சரளாவின் சொந்த ஊர், வீடு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கோவை சரளா கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும், பிறந்த ஊர் அது இல்லையாம். வேலைக்காக மட்டுமே மொத்த குடும்பமும் கோவைக்கு வந்துள்ளனர்.

மேலும், ஒரு வாடகை வீட்டில் கோவை சரளாவின் மொத்த குடும்பமும் வாழ்ந்து வருகிறது. 15 வயது வரை அந்த வீட்டில் தான் கோவை சரளா வாழ்ந்து வந்துள்ளார். தொடர்ந்து, 15 வயதிற்கு பிறகு அந்த வீட்டை விட்டு கோவை சரளாவும் அவருடைய குடும்பமும் வெளியேறி விட்டார்கள்.

Advertisement

கோவையில் வீடு ஒன்று இருந்தாலும், அவருடைய அம்மாவிற்காக ஒரு வீடும், சென்னையில் ஷூட்டிங் போக பிற நேரங்களில் கோவை சரளா வந்து வசிப்பதற்கு ஒரு வீடு இருக்கிறது.

94 வயதாகும் கோவை சரளாவின் தாய் தற்போது அவர் ஆரோக்கியமாகவும், நல்ல தெளிவாக பேசியும் நடமாடிக் கொண்டு இருக்கிறார். அவருடைய வீட்டிற்கு பக்கத்திலேயே கோவை சரளாவின் வீடும் இருக்கிறது. அப்படியே கோவை சரளாவின் சகோதரிகள் வீடும் இருக்கிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement