LATEST NEWS
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமில்லாமல் அவதிப்படும் பிரபல செய்தி வாசிப்பாளர்…! உதவி கோரி அவரே வெளியிட்ட பதிவு…!

பிரபல தனியார் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி வருபவர் சௌந்தர்யா. இவர் இரத்த புற்றுநோயால் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். ‘எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அவரது ரத்த புற்று நோயை குணப்படுத்தும்’ என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் பணமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார் சௌந்தர்யா.
தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்ட நிலையில் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 5.51 லட்சமும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் 5 லட்சமும் நிதியுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தேவைப்படுவதால் பொதுமக்களிடம் நிதியுதவியை கோரி உள்ளனர்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களையும், பொதுமக்களிடம் உதவி கேட்டு பதிவுகளையும் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த பதிவினை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். மேலும் கமெண்ட்களில் அவருக்கு ஆறுதலையும் கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
View this post on Instagram