TRENDING
விசாரிக்க சென்ற போலீசாரை கடித்து குதறிய பெண்…மயங்கி விழுந்த போலீஸ் … காரசாரமான வீடியோ காட்சிகள் …
அமெரிக்கா ,ப்ளோரிடாவில் மாகாணத்தில் உள்ள ஒரு குடி இருப்பில் கணவனுடன் சண்டை போட்டுகொண்டு அடிதடியில் ஈடுபட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது . அதனால் விரைந்து அந்த குடி இருப்புக்கு சென்ற போலீசார்கள் அவர்களை விசாரித்து கொண்டு இருக்கும் பொழுது கனவுனுடன் சண்டை போட்டு கொண்டு இருந்த மனைவி Cherie Saunders (38) குடிபோதையில் விசாரிக்க வந்த போலீசாரையும் தவறான வார்த்தைகள் கொண்டு திட்டியும் காலால் எட்டி உதைத்தும் இருக்கிறார்.
அவருக்கு கைவிலங்கு போட முயன்ற பொழுது அருகில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரியை காலை பிடித்து கடித்து கொண்டு இருந்தார். மற்ற போலீசார்கள் அவளை கஷ்டப்பட்டு இழுத்தார்கள் . கடிவாங்கிய போலீசாருக்கு சிறிது நேரத்தில் மயக்கம் வந்துவிட்டது . அதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்ததில் அவரின் காலில் இரண்டு இஞ்சுக்கு பற்கள் பதிந்து இருந்தன. மேலும் அந்த இடத்தில் ரத்தம் கசிந்தது. இதனால் அந்த பெண்ணின் மீது 3 வழக்குகள் பதிவு செய்த்து சிறையில் அடைத்தனர்.