TRENDING
ஏய் இந்தாம்மா…! ஆதி குணசேகரனாக மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் இவர்தானா…? வெளியான எதிர்நீச்சல் ப்ரோமோ…!
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம் எவ்வளவு பெரிய வலியமான ரோல் என்பதை தமிழக ரசிகர்கள் அறிவார்கள். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது நடிகர் மாரிமுத்து தான். ஆம், இயக்குனரின் சொல்லையும் தாண்டி தன்னுடைய உடல் மொழியாலும், ஏம்மா ஏய் போன்ற வசனங்களிலாலும் ஆதி குணசேகரனாக வாழ்ந்தவர் மாரிமுத்து. இவருடைய இறப்புக்கு பின் யார் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தது. முதலில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரனாக நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது.
அதன்பின், மற்ற சில நடிகர்களின் பெயர் கூட அடிபட்டது. ஆனால் நடிகர் வேல ராமமூர்த்தியோ ‘தற்போது பிசியாக படங்களில் நடித்து வருவதாகவும், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க தற்போது பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது, இன்னும் உறுதியாகவில்லை’ என கூறியிருந்தார். தற்போது அவரையே இறுதி செய்து ஷூட்டிங் தொடங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வைரலாகி வந்தது. இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் புதிய ஆதி குணசேகரனாக நடிக்கவிருப்பதாக வேல ராமமூர்த்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மறைவால், ஆதி குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என கதையை மாற்றி அமைத்திருந்தனர். தற்போது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க வந்துவிட்டதால், வீட்டை விட்டு வெளியேறிய ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார்.இந்த ப்ரோமோ வீடியோவில் அவரது முகத்தை காட்டாவிட்டாழும் அவர் தான் என்பது நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…