கொடைக்கானலில் 7 ஏக்கர் நிலத்தை வளைத்து போட்ட பிரகாஷ்ராஜ்?… வருமானவரித்துறை பரபரப்பு விளக்கம்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

கொடைக்கானலில் 7 ஏக்கர் நிலத்தை வளைத்து போட்ட பிரகாஷ்ராஜ்?… வருமானவரித்துறை பரபரப்பு விளக்கம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் பிரகாஷ்ராஜ். இவர் தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் கொடைக்கானல் மலை கிராம விவசாயிகள் சமீபத்தில் பிரகாஷ்ராஜ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தனர். அதாவது கொடைக்கானலில் தன்னுடைய பெயரில் உள்ள ஏழு ஏக்கர் நிலத்துடன் அருகில் இருந்த சதுப்பு நிலத்தையும் பிரகாஷ்ராஜ் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.

அதுமட்டுமல்லாமல் அனுமதி இல்லாமல் ஜேசிபி வாகனங்களை கொண்டு பிரகாஷ்ராஜ் சாலை அமைத்து வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்த செய்தி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது கொடைக்கானல் அஞ்சு வீடு பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நடிகர் பிரகாஷ்ராஜ் பெயரில் 7 ஏக்கர் பட்டா நிலத்தில் எந்த ஒரு ஆக்கிரமிப்பும் இல்லை என்று வருமானவரித்துறை தற்போது தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட இடத்தில் உள்ள பாரம்பரிய பொதுப் பாதையை மக்கள் பயன்படுத்த தடை இல்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் பிரகாஷ்ராஜ் மீது எழுந்த பொய்யான புகார் தற்போது உண்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.