LATEST NEWS
“நான் கீர்த்தி ஷெட்டியை அந்த மாதிரி நினைச்சுட்டேன்”… அதுனால தான் அவங்க கூட நடிக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பார். இவர் இறுதியாக விடுதலை திரைப்படத்தின் சூரி உடன் இணைந்து நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிட்டா பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதேசமயம் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட்டில் பிரபலமானார். இந்த நிலையில் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி, தெலுங்கில் வெளியான உப்பேனா என்ற படத்தில் கீர்த்தி செட்டிக்கு தந்தையாக நடித்தேன்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு நான் தமிழ் படத்தில் ஒப்பந்தமானதால் அந்த படத்தில் கீர்த்தி சட்டியை ஹீரோயினியாக நடிக்க வைக்க பட குழுவினர் திட்டமிட்டனர். இதனை அறிந்த நான் உடனடியாக படக்குழுவிற்கு அழைத்து கீர்த்தி செட்டிக்கு அப்பாவாக நடித்து விட்டேன், அவர் எனக்கு மகள் மாதிரி. அவருடன் எனக்கு ரொமான்டிக்காக நடிக்க முடியாது, அதனால் அவரை ஹீரோயினியாக தவிர்க்கவும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.