VIDEOS
300 கோடி பட்ஜெட்.. விக்ரமுக்கு தெரியாமல் கமுக்கமாக படக்குழு செய்த வேலை… டீசர் பார்த்து குழம்பும் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். சினிமாவில் நுழைந்தபோது மிகப்பெரிய போராட்டங்களை சந்தித்த இவருக்கு சேது திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. பின்னர் சமீபகாலமாக இவர் நடித்த பல திரைப்படங்களும் தோல்வியை தழுவிய நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கண்டிப்பாக விக்ரமுக்கு வெற்றியை கொடுக்கும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் திடீரென்று நேற்று விக்ரம் நடித்த கர்ணா திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. விமல் என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கின்றார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இது திரைப்படத்தில் நடிப்பதற்கு விக்ரம் கமிட்டான நிலையில் சில காரணங்களால் படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் நின்று விட்டது. பின்னர் இது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் திடீரென டீசர் வெளியானதால் இப்படி ஒரு டீசர் வெளியானது விக்ரமுக்கு தெரியுமா? படத்தின் சூட்டின் விரைவில் தொடங்குகிறதா என்று ரசிகர்கள் குழப்பத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.