இந்த மனசு யாருக்கும் வராது… ஒரு நாள் நைட்ல ஓடி வந்து உதவி செய்த விஜயகாந்த்… கலங்கியபடி நடிகை கௌசல்யா பகிர்ந்த சம்பவம்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

இந்த மனசு யாருக்கும் வராது… ஒரு நாள் நைட்ல ஓடி வந்து உதவி செய்த விஜயகாந்த்… கலங்கியபடி நடிகை கௌசல்யா பகிர்ந்த சம்பவம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை கௌசல்யா. விஜய், கார்த்தி மற்றும் பிரபுதேவா என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தின் மூலம் கௌசல்யா என்ற பெயரில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் கவிதா என்ற தன்னுடைய பெயரை கௌசல்யா என்று அவர் மாற்றிக் கொண்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பலமொழி படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 40 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் நடித்த திரைப்படத்தின் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட இக்கட்டான பிரச்சனையில் விஜயகாந்த் தனக்கு உதவியது தொடர்பாக கௌசல்யா பேசியுள்ளார்.

அதில், அவர் நடித்த வானத்தைப்போல திரைப்படத்தில் நான் அவருடன் இணைந்து நடிக்கும் போது எங்களை எல்லாம் அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார். ஒருமுறை நான் இரவு காரில் வந்து கொண்டிருக்கும்போது நல்ல மழை பெய்ததால் ரோட்டில் என்னுடைய கார் பஞ்சர் ஆகி நின்று விட்டது. அப்போது அந்த வழியாக காரில் வந்த விஜயகாந்த் அவரே காரில் இருந்த ஸ்டெப்னி டயரை எடுத்து பஞ்சரான டயரை மாற்றி என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இது போன்ற குணம் யாருக்கும் வராது. விஜயகாந்த் எப்போதுமே யாராலும் குறை சொல்ல முடியாத நபர் என்று கௌசல்யா பேசியுள்ளார்.