BIGG BOSS
ஜோவிகாவின் அப்பா இவர் தான்… ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நச்சுன்னு பதில் சொன்ன நடிகை வனிதா…
விஜய் டிவி சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ் சீசன் 7’ இதில் ஒவ்வொரு வாரமும் பரபரப்பாக ஒளிபரப்பாகப்படுகிறது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதல் வாரத்திலேயே வனிதா மகள் ஜோவிகா விஜயகுமார் விசித்ராவுக்கும் இடையேயான கல்வி முக்கியத்துவம் குறித்து எழுத பிரச்சனை மிகவும் பெரிதாக வெடித்தது.
இந்நிலையில் ஜோவிகா ஏன் விஜயகுமார் பெயரை பயன்படுத்துகிறார் என சமூக வலைதள பக்கத்தில் பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக வனிதா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் எனக்கும் முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்தவர் தான் ஜோவிகா.ரன்வீர் கபூர், ஷாருக்கான் போன்றவர்கள் பரம்பரை பெயரை பயன்படுத்தினால் யாரும் கண்டு கொள்வதில்லை.
ஆனால் ஜோவிகா விஜயகுமார் என்று பயன்படுத்தியது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.ஆரம்பத்தில் இருந்து ஜோவிகா விஜயகுமார் என்று தான் பயன்படுத்தி வருகிறோம். அனைத்திலும் A.ஜோவிகா விஜயகுமார் என்று தான் இருக்கிறது. ஜோவிகா பிறக்கும்போதே நான் தனியாக இருந்ததால் எங்களை அடையாளப்படுத்திக் கொள்ள எனது அப்பாவின் பெயரை பயன்படுத்தினோம் என வனிதா கூறியுள்ளார்.