LATEST NEWS
ஒரு வாரம் கழித்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம் வெளியிட்ட பதிவு…. அப்படி என்ன சொன்னார் தெரியுமா….????

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த வாரம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற இறுதியாக ஷிவின், அசீம், விக்ரமன் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர். இவர்களில் விக்கிரமன் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் இறுதியாக டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் தட்டி தூக்கினார். இவருக்கு 50 லட்சம் பரிசு மற்றும் ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் மறுபக்கம் விக்ரமன் வெற்றி பெறுவார் என நினைத்த பலரும் தொடர்ந்து அசீமை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு வாரம் கழித்து தற்போது அசீம் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/actor_azeem/status/1618939105936814082