LATEST NEWS
கவினுக்கு வில்லியாக நடிக்கப் போகும் பிரபல நடிகை…. அட இவங்களா?… அப்ப படம் ஹிட்டுதான்…!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து டாடா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது. இப்படம் இவரது கேரியருக்கு மிக முக்கிய படமாக அமைந்தது.
குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் அதிக வசூலை பெற்று நல்ல பேரை கவினுக்கு நல்ல பேரை பெற்றுக் கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நடிகர் கவினுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. டாடா மற்றும் லிப்ட் போன்ற திரைப்படங்கள் நல்ல பெயரை பெற்று கொடுத்ததால் கடகடவென தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார் கவின் . இதைக் கேட்டு கோடம்பாக்கத்தில் இருந்த பலரும் அவர் மீது அதிர்ப்பையில் இருந்தார்கள்.
பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கவிதை ஒப்பந்தம் செய்ய தயங்கி வந்த நிலையில் புதுமுக இயக்குனர் ஒருவர் கவினை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்க இருக்கிறார். இப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் வில்லியாக நடிக்க இருக்கிறாராம். அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஆண்ட்ரியா.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் கதையில் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பவர். அவர் இப்படத்தில் கவினுக்கு வில்லியாக நடிக்க இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.