LATEST NEWS
கமலின் ஜோடி வேட்டையாடு, விளையாடு பட ஹீரோயின் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? போட்டோவை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்..!!
கமல்ஹாசன் நடிப்பில் உருவான வேட்டையாடு, விளையாடு திரைப்படத்தில் கமலினி முகர்ஜி ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் நடிகை ரேவதி இயக்கிய பிர் மிலேங்கா என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து தெலுங்கில் வெளியான ஆனந்த் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமலஹாசன், ஜோதிகா நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் கமலினி நடித்தார். முக்கியமாக கமல்ஹாசனின் மனைவியாக கமலினி முகர்ஜி இடம்பெற்ற பார்த்த முதல் நாளே பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனையடுத்து தமிழில் காதல்னா சும்மா இல்ல என்ற திரைப்படத்தில் கமலினி நடித்தார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். கடைசியாக கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே சூர்யா நடித்த இறைவி படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் மனைவியாக கமலினி நடித்தார்.
அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கமலினி முகர்ஜி கலந்து கொண்டார். அப்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக மாறியிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த கமலினி முகர்ஜியா இப்படி மாறிவிட்டார்? என ஷாக் ஆகி கமெண்ட் செய்து வருகின்றனர்.