GALLERY
இயக்குனர் சேரனுக்கு இவ்வளவு பெரிய மகள்களா..? பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ…!!

பிரபல நடிகரும் இயக்குனருமான சேரனுக்கு சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் அதிகம். இவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரின் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார்.
அதன் பிறகு நாட்டாமை உள்ளிட்ட படங்களிலும் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். முதன் முதலில் இயக்குனராக சேரனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய படம் பாரதி கண்ணம்மா.
மாபெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான பாரதிகண்ணம்மா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.
அதன் பிறகு பாண்டவர் பூமி, போர்க்களம், வெற்றி கொடி கட்டு உள்ளிட்ட திரைப்படங்களும் சேரனுக்கு புகழைத் தேடி தந்தது.
இவர் தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
பின்னர் சேரன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான ஆட்டோகிராப் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.
இதுவரை சேரன் 4 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். மேலும் 4 தமிழ்நாடு பிலிம்ஸ் விருதுகளும், 5 தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
இது போக சிறந்த இயக்குனர் என பல துறைகளிலும் விருது வாங்கியுள்ளார். இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள கொழுஞ்சிபட்டி என்னும் கிராமத்தில் பாண்டியன்- கமலா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். சேரனுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
சேரனுக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தாமினி, நிவேதா பிரியதர்ஷினி என்ற மகள்கள் உள்ளனர்.
தற்போது சேரனின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

#image_title