” அய்யர் தாலி எடுத்து கொடுக்க மணமக்கள் திருமணம் இஸ்லாமிய பள்ளிவாசல் முன்பு நடந்தது “…?? நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்படும் சம்பவம் நடந்தது பள்ளிவாசலின் முன்பு … - cinefeeds
Connect with us

TRENDING

” அய்யர் தாலி எடுத்து கொடுக்க மணமக்கள் திருமணம் இஸ்லாமிய பள்ளிவாசல் முன்பு நடந்தது “…?? நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்படும் சம்பவம் நடந்தது பள்ளிவாசலின் முன்பு …

Published

on

இந்த காலத்திலும் ஒரு சில இடங்களிலில் மனித நேயம் என்பதும் மக்களின் மத ஒற்றுமை என்பதும் நம்மால் காணமுடிகிறது. அதற்கு எடுத்து காட்டாக தற்பொழுது கேரளா ஆழப்புழாவில் ஜனவரி 19 ஆம் தேதி அன்று ஒரு திருமணம் இஸ்லாமியர்கள் பள்ளி வாசல் முன் இந்து சட்டப்படி ஒரு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது . அந்த திருமணத்தை இஸ்லாமியர்களே முன்னின்று சிறப்பாக நடத்தி கொடுத்தனர். மேலும் அந்த திருமண ஜோடிக்கு இஸ்லாமியர்கள் நிதி திரட்டி 10 சவரன் தங்க நகைகளும் மேலும் 2 லட்சம் பணம் ரொக்கமாகவும் திருமணத்திற்கு சீர்வரிசையாக மணப்பெண்ணிற்கு பரிசு அளித்தனர்.

இந்த ஒரு சம்பவம் பார்ப்பவர்களை நெகிழவைத்தது. . உலகம் முழுவதும் பேசவைத்து இவர்களின் ஒற்றுமை பற்றி . கேரளா , ஆழப்புழா பகுதியை சேர்ந்தவர் பிந்து . இவர் கணவனை இழந்தவர் . பிந்துவிற்கு ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். அஞ்சு மற்றும் அமிர்தவல்லி . குடும்ப சூழ்நிலை காரணமாக மகள்களின் படிப்பை 12 ஆம் வகுப்புவரை படிக்கவைத்து விட்டு அவர்களது படிப்பை நிறுத்திவிட்டார். மேலும் தாய் மற்றும் மகள்கள் சிறு சிறு கடைகளில் வேலை செய்து வருகிறார்கள் .அதில் மூத்த மகள் அஞ்சுவிற்கு தற்பொழுது வயது 26 . அஞ்சுவிற்கு ஆழப்புழா ,கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சரத் சசி என்பவருடன் திருமணம் நிச்சயமானது .

Advertisement

Advertisement

ஆனால் தாய் பிந்துவிற்கு திருமணம் நடத்தவும் வரதட்ஷனை கொடுக்கவும் வழியில்லாத காரணத்தினால் பக்கத்து வீட்டு இஸ்லாமியர் நஜுமுதீன் என்பவரிடம் தெரிவித்தார். அப்பொழுது நஜுமுதீன் சேராவள்ளி முஸ்லிம் ஜமாத் செயலாளராக இருக்கிறார்..பள்ளிவாசல் கமிட்டி அதிகாரிகளிடம் உதவி கேட்குமாறு நஜுமுதீன் பிந்துவிற்கு ஐடியா சொன்னார் . அதன்படி பிந்துவும் கோரிக்கை கடிதம் பிறப்பித்தால் . அவளின் கடிதத்தை பெற்று அவர்கள் இவளுக்கு உதவிசெய்ய வேண்டும் என்று தீர்மானித்து நிதி திரட்டி அஞ்சுவின் திருமண செலவுகள் முழுதும் எங்கள் பொறுப்பு என்று சொல்லி ஜனவரி 19 பள்ளிவாசல் முன் இந்த திருமணம் நடந்தது.

இந்த சுப காரியத்தை அறிந்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த திருமணத்தை பார்க்கும் பொழுது இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்களின் ஒற்றுமை தெரிகிறது . இந்த ஒரு சம்பவம் என்னை மகிழவைத்து இருக்கிறது. மேலும் பெருமை படுத்தி இருக்கிறது என்று சொல்லி மணமகளுக்கும் அந்த இஸ்லாமியர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். நாடுமுழுவது இந்த திருமணத்திற்காக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement