LATEST NEWS
ஒருவேளை குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிச்சிருந்தா?….. எப்படி இருந்திருக்கும் தெரியுமா?….. வைரலாகும் புகைப்படம்….!!!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது கார்த்திக், விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் , த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராமன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் எப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கரெக்டாக நபர்களை தேர்வு செய்தார் மணிரத்தினம், என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதில் ரசிகர்களை அதிக கவர்ந்த கதாபாத்திரம் என்றால் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரமும், திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரமும்தான். இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ஆனால் அந்த சமயம் அண்ணாத்த படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்ததால், பொன்னின் செல்வன் படத்தை நிராகரித்தார். ஆனால் பொன்னின் செல்வன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. ஒருவேளை பொன்னியின் செல்வன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தால் எப்படி இருக்கும், என்று ஒரு போஸ்டர் டிசைனை ரசிகர்கள் உருவாக்கி இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றன. இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.