LATEST NEWS
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் LEO.. அப்போ இது தளபதி பொங்கல் தான்.. வெளியான அசத்தல் ப்ரோமோ..!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விஜயும் திரிஷாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளனர். லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது. அனைத்து விமர்சனங்களையும் தாண்டி லியோ வெற்றிகரமாக ரிலீஸ் ஆனது.
உலக அளவில் லியோ திரைப்படம் 598 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. திரையரங்கம், ஓ.டி.டி என அனைத்திலும் லியோ திரைப்படம் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.
தற்போது பிரபல சன் தொலைக்காட்சியில் லியோ படம் ஒளிபரப்பாக உள்ளது. அதாவது பொங்கல் பண்டிகை முன்னிட்டு லியோ படத்தை முதன்முறையாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்வதாக ப்ரோமோ வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.