எப்பா எத்தனை லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே புதிய பிசினஸ் தொடங்கிய நயன்தாரா இந்த முறை என்ன தெரியுமா - cinefeeds
Connect with us

LATEST NEWS

எப்பா எத்தனை லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே புதிய பிசினஸ் தொடங்கிய நயன்தாரா இந்த முறை என்ன தெரியுமா

Published

on

விஜயதசமி தினத்தை முன்னிட்டு நடிகை நயன்தாரா ஃபேமி நைன் எனும் புதிய பிசினஸை தொடங்கியிருக்கின்றார் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் தமிழில் முதன்முறையாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தற்போது உயர்ந்த இடத்திற்கு சென்று இருக்கின்றார்.

சூர்யா அஜித் விஜய் ஜெயம் ரவி விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் என அனைத்து நடிகர்களுடனும் நடித்து விட்டார் இதை தவிர பாலிவுட் சென்று ஷாருக்கான் உடனும் நடித்து விட்டார் தற்போது கமலின் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் ரவுடி பிக்சர்ஸ் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் அது மட்டுமில்லாமல் பல பிசினஸ்க்களையும் செய்து வருகின்றார்.

Advertisement

இவர் பெரும்பாலும் பெண்களின் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நயன் ஸ்கின் என்ற சரும பராமரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார் 9 ஸ்கின் பிராண்டில் இரண்டு வகையான சீரம் இரண்டு வகையான கிரீம் மற்றும் ஒரு எண்ணெய் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது

இவற்றின் ஆரம்ப விலை 999 மற்றும் அதிகபட்சம் 1899 ஆகும் இந்நிலையில் தற்போது புதிய பிசினஸ் ஒன்றை துவங்கி இருக்கிறார் நடிகை நயன்தாரா ஃபேமிலி நயன் என்கின்ற நாப்கின் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நயன்தாரா தெரிவித்திருந்ததாவது பெருமிதம் கொள்கிறேன்.

Advertisement

இந்த விஜய்து சாமி திருநாளில் ஃபெமி நயன் என்னும் புதிய பயணத்தை தொடங்குவதில் பெருமிதமாக இருக்கின்றது. தனிமனித சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த செமி நயன் பிராண்ட் மட்டுமல்ல ஒரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான அடையாளம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த முயற்சியை கொண்டாட என்னுடன் இணையுங்கள் என்று தெரிவித்திருந்தார் இந்த புதிய முயற்சிக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement