அடேங்கப்பா.. அம்பானி வீட்டு திருமணத்தில் நிகழ்ச்சி நடத்த பாப் பாடகி ரிஹானா வாங்கிய சம்பளம் இவ்ளோவா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா.. அம்பானி வீட்டு திருமணத்தில் நிகழ்ச்சி நடத்த பாப் பாடகி ரிஹானா வாங்கிய சம்பளம் இவ்ளோவா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

Published

on

முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த அம்பானிக்கும் தொழிலதிபர் வீரன் மெர்சன்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டுக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்தை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்கு முந்தைய சடங்குகள், கொண்டாட்டங்கள் மார்ச் 1 நேற்று முதல் 3-ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெறுகிறது. இதற்காக ரிலையன்ஸ் குடும்பத்தின் சார்பில் 2500 ஏக்கர் நிலத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆங்கில பாப் பாடகி ரிஹானா நிகழ்ச்சியில் பாடல் பாடுகிறார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

Advertisement

ரிஹானா பல்வேறு நாடுகளுக்கும் சென்று இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். தற்போது ஆனந்த அம்பானி ராதிகா மெச்சாண்டின் திருமண நிகழ்ச்சியில் ரிஹானா இசை கச்சேரியை நடத்துகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு ரிஹானா சூப்பர் பவுல் என்னும் நிகழ்ச்சியை நடத்தினார். அதன் பிறகு அவர் வேறு எந்த மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிஹானா கலந்து கொண்ட மிகப்பெரிய நிகழ்ச்சி இதுதான். நேற்று மாலை 5.30 மணி அளவில் ரிஹானாவின் இசை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இசை நிகழ்ச்சி நடத்த ரிஹானா 74 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஒரு பாப் பாடகிக்கு இத்தனை கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement