TRENDING
S.P.B உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்..! கையெடுத்து கும்பிட்ட மகன் சரண்..! வைரலாகும் வீடியோ
பிரபல திரைப்பட நடிகரான விஜய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று காலமானார். அவரின் இறுதிச்சடங்கானது தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தொடங்கியது.
புரோகிதர்கள் பாலசுப்ரமணியத்துக்கான இறுதிச்சடங்குகளை தொடங்க, அவரது மகன் எஸ்.பி.சரண் அவருக்கான இறுதிச்சடங்குகளை செய்தார். அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ இதோ