GALLERY
பிரபல சீரியல் நடிகை தீபா பாபு மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..

’அன்பே சிவம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பிரியமான தோழி’, ‘அத்தி பூக்கள்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார் தீபா பாபு .
இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கைச் சுமூகமாக அமையாததால் கணவருடன் முறைப்படி விவாகரத்து பெற்று விட்டார்.
கடந்த ஆண்டு சின்னத்திரை தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய சாய் கணேஷ் பாபுவுடன் காதல் ஏற்பட்டது.
இதையடுத்து தீபாவும், பாபுவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் சீரியல் நடிகை தீபா பேட்டியில் மகனை பற்றி பெருமையாக கூறியிருந்தார்.
அதில் எனக்கு அம்மாவாக, அப்பாவாக, சகோதரனாக, சகோதரியாக வாழ்வில் ஒரு வெல் விஷயராக இருப்பவர் என் பையன் தான்; நான் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணமும் என் பையன் தான் என்று பெருமையாக பேசியிருந்தார்.
தற்போது சீரியல் நடிகை தீபா, மகனின் 16 வது பிறந்த நாளை மகனின் நண்பர்களுடன் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருவதோடு மட்டுமில்லாமல் தீபாவின் ரசிகர்கள் அவரது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.