விஜய், அஜித் பட இயக்குனரோடு கூட்டணியா..? அயலான் பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய், அஜித் பட இயக்குனரோடு கூட்டணியா..? அயலான் பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்..!!

Published

on

பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான அயலான் படம் பொங்கலுக்கு சிறப்பு திரைப்படமாக ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த நல்ல படங்களில் நடித்து வருகிறார். மேலும் படங்களையும் தயாரித்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். காக்கி சட்டை படத்திற்கு பிறகு தனது 21-வது படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேலை பாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருநாள் தாகூர் நடிக்க உள்ளார்.

Advertisement

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த எந்த இயக்குனரின் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் நடிப்பில் உருவாகும் GOAT படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். அவரது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் பேசப்படுகிறது.

கோட் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜித்தின் மங்காத்தா, சூர்யாவின் மாஸ், விஜய்யுடன் GOAT ஆகிய படங்களை இயக்கிய வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் வைத்து எப்படி படம் எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement