VIDEOS
மாவீரன் படம் பார்க்க தியேட்டருக்கு வந்த விஜய் மனைவி சங்கீதா… சிவகார்த்திகேயன் மனைவியுடன் கலகல பேச்சு… வைரல் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழும் சிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்க யோகி பாபு, சுனில் மற்றும் சரிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
அதேசமயம் படத்தில் ஒலிக்கும் குரலாக விஜய் சேதுபதியும் மாவீரன் திரைப்படத்தில் இணைந்துள்ளார். பரத் சங்கர் இசை அமைத்துள்ள இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
இந்நிலையில் விஜயின் மனைவி சங்கீதா நேற்று மாவீரன் திரைப்படம் பார்ப்பதற்கு தியேட்டருக்கு வந்தார். கடந்த சில மாதங்களாக எந்த ஒரு விழா மற்றும் நிகழ்ச்சிக்கு வராத நிலையில் குழந்தைகளை கவனித்துக் கொண்டே வெளிநாட்டில் தங்கியுள்ள சங்கீதா தற்போது மாவீரன் திரைப்படம் பார்ப்பதற்காக சென்னையில் உள்ள பிரபல தியேட்டருக்கு வந்திருந்தார். அங்கு தியேட்டரில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியுடன் அவர் கலகலப்பாக பேசினார். தற்போது அதை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
.#SangeethaVijay & #AarthiSivakarthikeyan from the FDFS of #Sivakarthikeyan’s #Maaveeran 🔥@ShanthiTalkies @iamarunviswa pic.twitter.com/hlPatasKto
— Vimal Raj (@vimalraj9524) July 14, 2023