GALLERY
2023 டாப் 10 நடிகர், நடிகைகள் பட்டியல் வெளியீடு… லிஸ்டில் ஒரே ஒரு தமிழ் நடிகர்.. முதலிடத்தை பிடித்த ஹீரோ யார்..??
இந்தியாவில் ஒரு காலகட்டத்தில் பாலிவுட் உச்சத்தில் இருந்த நிலை மாறி தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மற்ற சினிமா துறையின் படங்களும் அதிக வசூல் சாதனை படைத்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது IMDB தளம் இந்தியாவின் டாப் 10 நடிகர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஷாருக்கான் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த டாப் 10 பட்டியலில் ஒரே ஒரு தமிழ் நடிகரின் பெயர் தான் இடம் பெற்றுள்ளது. அதாவது விஜய் சேதுபதி இதில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் இறுதியாக ஜவான் திரைப்படத்தில் நடித்த நிலையில் அடுத்ததாக ட்ரெயின் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
நடிகைகளை பொருத்தவரை நடிகை தமன்னாவுக்கு ஆறாவது இடமும் நயன்தாராவுக்கு ஐந்தாவது இடமும் கிடைத்துள்ளது. சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் காவாலா பாட்டுக்கு நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் தமன்னா. அதனைப் போலவே நயன்தாராவும் ஜவான் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.
இந்த பட்டியலில் நடிகர் அக்ஷய் குமார் ஒன்பதாவது இடத்தையும், நடிகை சோபிதா துளி பாலா எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா, தற்போது நாகசைதன்யாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அடுத்ததாக முன்னணி பாலிவுட் நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கரீனா கபூர் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அடுத்ததாக முன்னணி பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் ஆகியோர் மூன்றாவது மற்றும் இரண்டாவது இடங்களை பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் ஷாருக்கான் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நடிக்காமல் இருந்து மீண்டும் நடிக்க திரும்பி உள்ள ஷாருக்கான் எப்போது நடித்தாலும் ரசிகர்களுக்கு தானே பாலிவுட் பாஷா என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.