LATEST NEWS
நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. வெளியான கலக்கல் புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி.
இவர் தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரர் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
ரவி நடித்த முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் பிரபலமானதால் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார்.
தற்போது இவர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார் . இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அகிலன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது ஆரவ் ரவி மற்றும் அயான் ரவி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பார்ப்பதற்கு ஹீரோயினி போலவே செம்ம அழகாக இருக்கக்கூடியவர்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் நேற்று ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
