LATEST NEWS
சின்ன குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய நடிகர் விஜய் சேதுபதி…. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீப காலமாக வில்லன் மற்றும் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி ஒரு சிறுவனுடன் அழகாக பேசும் வீடியோ ஒன்றை வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுவனிடம் பேசி சாக்லேட் எல்லாம் கொடுத்து முத்தம் வாங்கி குழந்தையை விஜய் சேதுபதி அனுப்பி வைக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
