LATEST NEWS
“இதுதான் உண்மையான சேவை”… 167 பள்ளிகளை தத்தெடுத்த நடிகை… வாழ்த்தும் ரசிகர்கள்..!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவின் மகள் தான் லட்சுமி மஞ்சு. இவர் தமிழில் ராதா மோகன் இயக்கிய மொழி மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் ஏற்கனவே தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலமாக பல உதவிகளை செய்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது 167 பள்ளிகளை நடிகை லட்சுமி மஞ்சு தத்தெடுத்துள்ளார். இவர் 167 பள்ளிகளை தத்து எடுத்ததன் மூலமாக 16,497 மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகை லட்சுமி மஞ்சு கூறுகையில், புதுமையான கற்பித்தல் முறைகள் மூலமாக மாணவர்களின் மேம்படுத்தும் நோக்கத்தில் இதனை செய்துள்ளேன்.
தத்தெடுத்த பள்ளிகளில் 50 மாணவர்களை கொண்ட ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும் என்றும் தேர்வுகள் நடத்தி அதன் மூலமாக மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தெலுங்கு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 167 பள்ளிகளை இவர் தத்தெடுத்துள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.