LATEST NEWS
14 வயதில் இப்படி ஒரு திறமையா?… வனிதாவின் இளைய மகள் செய்த செயல்… வாழ்த்தும் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவ்வாறு திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார்.
அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தால் இரண்டு முறை விவாகரத்து செய்து பிரிந்தார். தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த இவர் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதா இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதே சமயம் யூட்யூபிலும் வீடியோக்களையும் பகிர்ந்து வருவது வழக்கம். இந்நிலையில் வனிதாவின் இளைய மகள் ஜெயனிதா ராஜன் தற்போது புத்தகம் ஒன்றை எழுதி அதனை வெளியிட்டுள்ளார்.
இதனை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும், வனிதா என்ன செய்தாலும் குழந்தைகளுக்கு சரியாக வழி நடத்துகிறார் என கருத்துக்களை கூறி அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
