LATEST NEWS
விஜய் தேவரகொண்டவுடன் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கீங்களா?…. ஒரே வார்த்தையில் பளிச்சென பதில் சொன்ன ராஸ்மிகா….!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கில் நடித்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கலந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நடிப்பில் மீண்டும் டியர் காம்ரேட் என்ற திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருந்த நிலையில் அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகவும் பிடித்த மோதிரம் ஒன்றை ராஷ்மிகா அணிந்துள்ளார். இருவரும் ஒரே வீட்டில் தங்கி வருகின்றன என்ற ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள நடிகை ராஸ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில், ஐயோ ரொம்ப யோசிக்காதீங்க என்று ரிப்ளை செய்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/SDM_official1/status/1643851677651570689
