கோலாகலமாக நடந்து முடிந்த KPY தீனாவின் திருமணம்… வெளியான அழகிய திருமண புகைப்படங்கள்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கோலாகலமாக நடந்து முடிந்த KPY தீனாவின் திருமணம்… வெளியான அழகிய திருமண புகைப்படங்கள்….!!!

Published

on

விஜய் டிவியில் காமெடியன்களாக அறிமுகமாகி தற்போது சினிமாவில் நுழைந்துள்ள பிரபலங்கள் பலரும் உள்ளனர்.

அவ்வகையில் விஜய் டிவியில் காமெடியனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தீனா.

Advertisement

இவர் தற்போது சினிமாவில் நுழைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடியாக அறிமுகமானவர்தான் தீனா.

தன்னுடைய இயல்பான காமெடி மூலமாக ஏராளமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.

Advertisement

தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் பா பாண்டி,கைதி மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் தற்போது நடித்து வருகின்றார்.

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு படிப்படியாக தன்னை மெருகேற்றிக் கொண்ட இவர் தற்போது திரைப்படங்களில் பிஸியான நடிகராக நடித்து வருகின்றார்.

இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதற்கு தனக்கு மிகுந்த ஆசை எனவும் கூறியுள்ளார்.

Advertisement

இவருக்கென இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவே பிசியாக நடித்து வந்தாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் தற்போதும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது சொந்த ஊரில் மூன்று அடுக்கில் பிரம்மாண்டமாக மாடி வீடு கட்டி பால் காய்ச்சினார்.

Advertisement

அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாக்கின. தற்போது வீடு கட்டி முடித்த கையோடு நடிகர் தீனாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர் பிரகதி என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர் ஒரு கிராபிக் டிசைனர்.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணத்தில் கலக்கப்போவது யாரு சரத் உட்பட ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in