தமிழ் சினிமாவின் மிகவும் favourite Jodi சூர்யா மற்றும் ஜோதிகா எத்தனை படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்கள் தெரியுமா?.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவின் மிகவும் favourite Jodi சூர்யா மற்றும் ஜோதிகா எத்தனை படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்கள் தெரியுமா?..

Published

on

தமிழ் சினிமாவில் ஃபேவரட் ஜோடியான  சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த படங்களைப் பற்றி இதில் காண்போம் .

1.பூவெல்லாம் கேட்டுப்பார்:

Advertisement

1999 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான படம் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ இப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா  ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா  இசை அமைத்துள்ளார்.இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

2.உயிரிலே கலந்தது:

Advertisement

2000 ஆம் ஆண்டு கே ஆர் ஜெயா இயக்கத்தின் வெளியான படம் ‘உயிரிலே கலந்தது’ படத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் ஜோடியாக நடித்துள்ளனர். தேவா இப்படத்திற்கு  இசை அமைத்துள்ளார். இப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான  தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றார்.

3.காக்க காக்க:

Advertisement

இயக்குனர் கௌதம்  மேனன் இயக்கத்தில்  2003 ஆம் ஆண்டு வெளியான படம் ‘காக்க காக்க’ இப்படத்தில் சூர்யா போலீஸ்கதா கதாபாத்திரத்திலும் ஜோதிகா ஆசிரியராக  இப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படமானது மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.

 

Advertisement

4.பேரழகன்:

2004 ஆம் ஆண்டு சசி சங்கர் இயக்கத்தில் எம் சரவணன் தயாரிப்பில் வெளியான படம் ‘பேரழகன்’ இப்படத்தில் சூர்யா இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார். ஜோதிகா இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படமானது மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது பல விருதுகளையும் வென்றுள்ளனர்.

Advertisement

5.மாயாவி:

2005 ஆம் ஆண்டு  இயக்குனர் சிங்கம்புலி இயக்கத்தில் எஸ் தானு பாலா தயாரிப்பில் வெளியான படம் ‘மாயாவி’இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சினிமாவின்கதாநாயகியாக ஜோதிகாவும் திருடன் கதாபாத்திரத்தில் சூர்யாவும் நடித்துள்ளனர்  இப்படத்தில்  ஆரம்பம் முதல் இறுதி வரை சிரிப்பு கலவரமாக அமைந்து இப்படமானது  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

Advertisement

6.ஜூன் ஆர்:

2006 ஆம் ஆண்டு இயக்குனர் ரேவதி எஸ் வர்மா  இயக்கத்தில் வெளியான படம்’ ஜூன் ஆர்’  இப்படத்தில் ஒரு உண்மையான தம்பதியினர் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதையை  இப்படம் காட்டுகிறது.இப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்தவர்  நடிகை குஷ்பு. இப்படத்திற்கு ஷரத் இசையமைத்துள்ளார் படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Advertisement

7.ஜில்லுனு ஒரு காதல்:

2006 ஆம் ஆண்டு இயக்குனர் என் கிருஷ்ணா இயக்கத்தில் கே இ ஞானவேல் தயாரிப்பில் வெளியான படம்’ ஜில்லுனு ஒரு காதல்’ இப்படத்தில் சூர்யா ஜோதிகாவை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பிறகு எதிரும் புதிரியமாக இருக்கும் சூர்யா ஜோதிகா வாழ்க்கையில் அடுத்தடுத்து வரும் மாற்றங்களை கொண்டு படம் அமைந்துள்ளது.இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in