ஒரு படத்திற்காக உடலை வருத்திக்கொண்டு நடித்த தமிழ் நடிகர்கள்…. வெளியான புகைப்படங்கள்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரு படத்திற்காக உடலை வருத்திக்கொண்டு நடித்த தமிழ் நடிகர்கள்…. வெளியான புகைப்படங்கள்….!!

Published

on

பொதுவாக சினிமா என்றாலே நடிப்பையும் தாண்டி சில விஷயங்கள் உள்ளன. அதாவது பேச்சு திறமை, நடனம், பட்டுக்கோப்பான உடல் உள்ளிட்ட பல உள்ளது. அதே சமயம் நடிகர்கள் பலரும் ஒரு திரைப்படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அப்படியே மாறிவிடுகிறார்கள்..ஒரு திரைப்படம் வசூல் ரீதியாக என்னதான் வெற்றி பெற்றாலும் பல வருடங்கள் கழித்து அந்த நடிகரின் சாதனை என்று பார்த்தால் அவர் ஏற்ற வேடத்தையும் அதற்காக அவர் உடலை மாற்றியது பற்றி தான் பேசுவார்கள். அப்படி திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி தன்னுடைய கேரக்டருக்காக உடலை வருத்திக் கொண்ட தமிழ் நடிகர்கள் யார் யார் என்பது குறித்து எதிர்பார்க்கலாம்.

நடிகர் சூர்யா:

Advertisement

கடந்த சில வருடங்களாகவே சமுதாயத்திற்கு ஏற்ற பல திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் சூர்யா சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது அவர் கங்குவா திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த திரைப்படத்திற்காக தனது உடலை வருத்திக் கொண்டு வித்யாசமான லுக்கில் இருக்கிறார். அதற்காக அவர் உடற்பயிற்சி செய்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பல இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் விக்ரம்:

Advertisement

சினிமாவில் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் நடிகர்களில் விக்ரமும் ஒருவர். இவர் முதலில் பீமா திரைப்படத்திற்காக சிக்ஸ் பேக்ஸ் காட்டி தனது உடலை வருத்திக் கொண்டார். அடுத்ததாக ஐ திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இவர் தங்களால் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்தத் திரைப்படத்திலும் தனது கதாபாத்திரத்திற்காக உடலை வெகுவாக மாற்றியுள்ளார்.

நடிகர் பரத்:

Advertisement

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களின் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் தான் பரத். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ராதே திரைப்படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்காக இவர் தனது உடலை மிகவும் வருத்திக் கொண்டார்.

நடிகர் ஆர்யா:

Advertisement

ஒரு கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஏற்ப தனது உடலை வருத்திக் கொண்டிருக்கும் ஆர்யா குறிப்பாக சர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் பாக்ஸராக தனது உடலை பல மாதங்களாக ஒர்க்அவுட் செய்து வருத்திக் கொண்டார். அந்தத் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நடிகர் கமல்ஹாசன்:

Advertisement

உலக நாயகன் கமல்ஹாசன் ஆளவந்தான் திரைப்படத்திற்காக பல மாதங்களாக வொர்க் அவுட் செய்து தனது உடலை சிக்ஸ் பேக்ஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்தார். அந்தப் படத்தில் இவர் மொட்டை தலையோடு சிக்ஸ் பேக் உடன் காட்சியளிப்பார்.

நடிகர் அஜித்:

Advertisement

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பையும் தாண்டி கார், பைக் ரேஸ் என பலவற்றில் கலந்து கொண்டு வருகிறார். அதே சமயம் துப்பாக்கிச் சுடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் விவேகம் திரைப்படத்திற்காக தனது உடலை மிகவும் வருத்திக் கொண்டார்.

நடிகர் மாதவன்:

Advertisement

தமிழ் சினிமாவில் முதலில் பெண்களின் ஃபேவரிட் ஹீரோவாக திகழ்ந்தவர் தான் மாதவன். இவரின் நடிப்பில் வெளியான இறுதி சுற்று திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் அந்த திரைப்படத்தில் ஒரு பாக்ஸராக நடித்திருந்த நிலையில் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப அது உடலை வருத்திக்கொண்டு ஒரு பாக்ஸராகவே மாறிவிட்டார்.

அருண் விஜய்:

Advertisement

முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகன் தான் அருண் விஜய். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு அருண் விஜய் உள்ளார். இவர் பாக்ஸர் திரைப்படத்திற்காக தனது உடலை மிகவும் வருத்திக் கொண்டார்.

 

Advertisement

நடிகர் துருவ் விக்ரம்:

தனது தந்தையைப் போலவே ஒரு கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதில் வல்லவர்தான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம். இவர் மகான் திரைப்படத்திற்காக தனது உடலை வருத்திக் கொண்டு சிக்ஸ் பேக் காட்டி பெண்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in